search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுக்கு சூப்"

    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு தூள் - 2 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    புதினா - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

    குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான சுக்கு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×